உலகையே புரட்டி போடும் அந்த ரஜினியின் படம்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்.!

தமிழில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்து வருகின்றன.

இந்த நிலையில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு படம் என்று ஒன்று இருக்கும். அதேபோல இயக்குனர் ஷங்கருக்கு கனவு படமாக வேள்பாரி திரைப்படம் இருந்து வருகிறது.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி அதிக வரவேற்பு பெற்ற நாவலாக இருக்கும் வேள்பாரியை திரைப்படமாக்க வேண்டும் என்பது ஷங்கரின் வெகு நாள் கனவாகும். இதற்காக வேள்பாரி திரைப்படத்திற்கான காப்புரிமையை ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறார் ஷங்கர்.

velpari

Social Media Bar

இயக்குனர் ஷங்கர் திரைப்படம்:

ஆனால் இன்னமும் அதை பணமாக்குவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் அது திரைப்படம் ஆகும் பட்சத்தில் உலக சினிமாவையே புரட்டிப் போடும் ஒரு படமாக இருக்கும் என்பது இயக்குனர் ஷங்கரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதையை முடித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர். தற்சமயம் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் பணியாற்றி வரும் ஷங்கர் அந்த படம் முடிந்ததும் வேள்பாரிக்கான வேலைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேள்பாரி திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. நடிகர் சூர்யாதான் வேள்பாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருக்கிறது விரைவில் இது குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.