தமிழ் சினிமா இயக்குனர்களில் காமெடி இயக்குனர்களாக பலராலும் அறியப்படுபவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி தனது முதல் படமே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார். காமெடி திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ஒரு இயக்குனர் பிரபலமாவது என்பது சாதாரண காரியமல்ல.
அந்த வகையில் சுந்தர் சி அதை சாதித்து காட்டினார். அவர் தனது பேட்டியில் கூறும்போது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை நான் இயக்கிய பிறகு அந்த திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியானது. அன்று நானும் படத்தை பார்க்க போனேன்.

ஆனால் திரையரங்கில் ஒரு ஈ, காக்கை கூட இல்லை. ஒரு நான்கு பேர் மட்டும் அமர்ந்திருந்தனர். அங்கு இருக்கும் ஊழியர் கூறும்போது இந்த படம்லாம் ஒரு வாரம் கூட தாங்காது தம்பி என்றார். அவ்வளவுதான் இதோடு நம் வாழ்க்கை முடிந்தது என நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
ஆனால் அதன் பிறகுதான் அந்த படம் பிரபலமானது. அதே திரையரங்கில் அடுத்து மேட்டுகுடி வெளியானப்போது முதல் காட்சிக்காக போனேன். அப்போது அங்கு ஏற்கனவே பெரும் திரளான கூட்டம் அந்த ரோட்டையே அடைத்துக்கொண்டு நின்றது.
எனவே மேட்டுகுடி படம் என் வாழ்வில் மறக்க முடியாத திரைப்படம் என கூறுகிறார் இயக்குனர் சுந்தர் சி.