News
என் தோல்வியை நான் ஒத்துக்குறேன் சாமி!. தெலுங்கு சினிமாவுடன் போட்டி போட்டு ஆடிப்போன சுந்தர் சி!.
தமிழில் முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். தற்சமயம் அரண்மனை என்கிற பேய் படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி.
அந்த திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி கொடுத்த பேட்டி அதிக பிரபலமாகி வந்தது. இந்த பேட்டியில் அவர் பேசும்போது என்னுடைய திரைப்படத்தை திருடி நிறைய தெலுங்கு படங்கள் எடுத்தனர்.

இதனால் எனக்கு கடுப்பாகி அவர்கள் படங்களை காபி அடித்து நான் படமாக்கினேன். அப்படி நான் இயக்கிய திரைப்படம்தான் வின்னர் என்கிறார் சுந்தர் சி. வின்னர் திரைப்படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காமெடி காட்சி ஒன்று வரும்.
அது தெலுங்கு படத்தில் இருந்து தூக்கியதுதான். தெலுங்கில் வாழைப்பழ தோலை மிதித்து அப்படியே காமெடியன் விழுவதாக காட்சி இருக்கும். நான் அதை கொஞ்சம் மேம்படுத்தி வாழைப்பழத்திற்கு பதில் கோலி குண்டுகளை வைத்தேன். ஹீரோவுக்கு குறுக்கே புகுந்து வரும் காமெடியன் அந்த கோலி குண்டை மிதித்து வழுக்கி சென்று பந்து மாதிரி தூண்களில் மோதி விழுவதாக காட்சி வைத்திருந்தேன்.
அந்த காட்சியை அப்படியே எடுத்து வேறு ஒரு தெலுங்கு படத்தில் மறுபடியும் வைத்திருந்தனர். உடனே நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். காபி அடிப்பதில் தெலுங்கு சினிமாவை மிஞ்ச முடியாது என அவற்றை காபி அடிப்பதை விட்டு விட்டேன் என பேட்டியில் கூறியுள்ளார்.
