News
அவங்க அடக்கி வாசிக்கணும்.. கடுப்பான திவ்யா துரைசாமி.. பிரியங்காவின் நிஜ முகம்.!
வாழை திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் திவ்யா துரைசாமி. பெரும்பாலும் திவ்யாதுரைசாமி நடிக்கும் படங்கள் அதிகமாக கவனத்திற்கு வருவது கிடையாது.
ஆனால் வாழை திரைப்படத்தில் அவர் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக இப்பொழுது பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 இவர் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு முகமாக மாறியிருக்கிறார் திவ்யா துரைசாமி.
இந்த நிலையில் தற்சமயம் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையேயான சண்டைதான் குக் வித் கோமாளியில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. அதாவது குக் வித் கோமாளியில் மணிமேகலை திவ்யா துரைசாமியை பாராட்டி பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் இடையில் பிரியங்கா உட்புகுந்துள்ளார்.
உண்மையில் வந்த பிரச்சனை:
அவர் சில பாயிண்ட்டுகளை முன்வைத்து திவ்யா துரைசாமியை பாராட்டி இருக்கிறார். அப்பொழுது மணிமேகலை நான் பேசும்பொழுது அதற்கு குறுக்க வந்து அதை பேசவிடாமல் ஏன் பேசுகிறீர்கள் என்று பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார்.
இதுதான் சண்டைக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் திவ்யா துரைசாமிதான் இந்த சண்டைக்கு காரணம் என்று பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த திவ்யா துரைசாமி கூறும் பொழுது அவர்கள் என்னைப் பற்றி பேசும் பொழுது சண்டையிட்டு கொண்டார்கள் என்பது உண்மைதான்.
ஆனால் அந்த சண்டைக்கு நான் காரணம் கிடையாது நான் அவர்கள் இருவரையும் அமைதிப்படுத்த பார்த்தேன். மணிமேகலை கூட ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டார். ஆனால் பிரியங்கா தேவையில்லாத பல வார்த்தைகளை விட்டு மணிமேகலையை மிக மோசமாக பேசிவிட்டார்.
அதனால்தான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார் இந்த நிலையில் மணிமேகலைக்கு பலரும் ஆதரவாக பேசி வரும் நிலையில் திவ்யா துரைசாமியின் ஆதரவும் மணிமேகலை பக்கமே இருப்பது தெரிகிறது.
