Tamil Trailer
ஹிப் ஹாப் ஆதியை காபியடித்த பிரதீப் ரங்கநாதன்..! வெளியான டிராகன் ட்ரைலர்..!
லவ் டு டே திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் முதன் முதலாக இயக்குனராக கோமாளி திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படத்திலேயே கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய்க்கு ஓடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறினார். அதிலிருந்து பிரதீப் ரங்கநாதன் படம் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்சமயம் எல்.ஐ.கே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ட்ராகன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்கில் வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் மேனன், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், என்று நிறைய பிரபலமான முகங்கள் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால் படத்தின் கதைகளம் அப்படியே மீசைய முறுக்கு திரைப்படத்தின் கதைகளாக இருப்பதை டைலரிங் வழியாக பார்க்க முடிகிறது. கல்லூரி காலங்களில் காதல் செய்து கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் வாலிபன் பிறகு கல்லூரிக்கு பிறகு வேலை தேடி செல்லும் பொழுது சந்திக்கும் பிரச்சனைகள் அதிலிருந்து மீண்டு அவன் எப்படி சாதிக்கிறான் என்பதாக இந்த படத்தின் கதை இருக்கிறது.
இதே கதை அம்சத்தைதான் மீசைய முறுக்கு படமும் கொண்டிருந்தது தொடர்ந்து இளைஞர்களை கவரும் கல்லூரி, காதல் மாதிரியான கதைகளங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் வெற்றிவாகை சூடிவிடலாம் என்று நினைக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் என்று ஒரு பக்கம் கேள்விகள் எழுந்து வருகிறது.
அதே சமயம் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். லவ் டுடே திரைப்படம் வெற்றி பெற்றது போலவே இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை பெரும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இதற்கு முன்பு அவர் நடித்த மீசைய முறுக்கு திரைப்படமும் நல்ல வெற்றியை கண்டது. ஆனால் அந்த படத்தில் காமெடி காட்சிகள் நிறைய இருந்தன. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் காமெடி காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
