டிராகன் பட நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்த சிறுவன்.. ஆடிப்போன இண்டஸ்ட்ரி.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முக்கியமானவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகதான் இவர் அறிமுகமானார்.

இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கோமாளி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் கொடுத்த வெற்றியை கொடுத்து அடுத்து லவ் டுடே என்கிற திரைப்படத்தை அவர் இயக்கினார்.

அந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் ஒரு நடிகராக நல்ல வரவேற்பை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். மேலும் அந்த படம் மூலமாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு நல்ல வருவாய் கிடைத்தது. எனவே மீண்டும் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய தயாரிப்பில் படத்தில் நடிக்க வேண்டும் என ஏ.ஜி.எஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் அடுத்து ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படம் டிராகன், இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக காயாடு லோகர் என்பவர் நடித்திருந்தார்.

Social Media Bar

இந்த நிலையில் டிராகன் படக்குழு சமீபத்தில் சரிகமப என்னும் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இது சிறுவர் சிறுமியர் பாடல்கள் பாடும் ரியாலிட்டி நிகழ்ச்சியாகும்.

இதில் ஒரு சிறுவன் நடிகை காயாடு லோகருக்கு உதட்டில் முத்தமிட்டதுதான் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதுக்குறித்து நெட்டிசன்கள் கூறும்போது அந்த சிறுவன் தெரியாமல் கூட செய்திருக்கலாம்.

ஆனால் அதை டிவி சேனல் கட் செய்துவிட்டு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியிருக்க வேண்டும். மாறாக இப்படி அந்த காட்சியை வெளியிட்டது தவறு. மற்ற குழந்தைகளுக்கு இது தவறான முன்னுதராணமாக அமையும் என பேசி வருகின்றனர்.