Box Office
டிராகன் திரைப்படம் 6 நாள் வசூல் நிலவரம்..! அடுத்த சாதனையை செய்த பிரதீப் ரங்கநாதன்.!
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். அவர் முதன் முதலாக நடித்த லவ் டுடே திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் ஹிட் கொடுத்தது.
அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு கதாநாயகனாக நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டிராகன் மற்றும் எல்.ஐ.கே ஆகிய 2 படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த நிலையில் டிராகன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து 3 நாட்களில் 50 கோடி வரை வசூல் செய்தது இந்த திரைப்படம்.
இந்த நிலையில் தற்சமயம் 6 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளது. எனவே எப்படியும் 10 நாட்களுக்குள் இந்த திரைப்படம் 100 கோடி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
