Connect with us

லக்கி பாஸ்கர் 2 துவங்க போறோம்.. அப்டேட் கொடுத்த படக்குழு..!

Tamil Cinema News

லக்கி பாஸ்கர் 2 துவங்க போறோம்.. அப்டேட் கொடுத்த படக்குழு..!

Social Media Bar

லக்கி பாஸ்கர் என்கிற ஒரே திரைப்படத்தின் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு இயக்குனராக வெங்கி அட்லுரி இருக்கிறார். இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார்.

அவர் நிறைய திரைப்படங்கள் இயக்கிய பொழுதும் லக்கி பாஸ்கர் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. இதற்கு முன்பு தமிழில் 2023 ஆம் ஆண்டு வெளியான வாத்தி திரைப்படமும் இவர் இயக்கியதுதான்.

லக்கி பாஸ்கர் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46வது திரைப்படத்தை இவர் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான பட வேலைகள் தற்சமயம் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த திரைப்படம் முடிந்த பிறகு மீண்டும் லக்கி பாஸ்கரின் இரண்டாம் பாகத்தை இவர் இயக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. முதல் பாகத்தில் கதாநாயகன் அமெரிக்காவிற்கு செல்வதாக கதை முடியும்.

பிறகு அமெரிக்காவில் அவர் என்ன மாதிரியான விஷயங்களை செய்கிறார் என்பதாக இரண்டாம் பாகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே துல்கர் சல்மானிடம் பேசி விட்டதால் அவர் இரண்டாம் பாகத்திற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

To Top