News
எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 கதை இதுதான்.. ஆதி குணசேகரனை இப்படி மாத்த போறாங்களாம்..
சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கி அதிக வரவேற்பை பெற்ற சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் செல்லும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் பெரும் தொடராக செல்லவிருந்த எதிர்நீச்சல் சீரியல் பாதியிலேயே நின்றுவிட்டது. திடீரென அந்த சீரியலை முடித்துவிட்டனர். பொதுவாகவே அந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் சீரியல் என்று இயக்கினாலே பல வருடங்களுக்கு இயக்கக்கூடியவர்.

வரவேற்பை பெற்ற சீரியல்:
அப்படிப்பட்டவர் எதற்கு இவ்வளவு சீக்கிரமாக இந்த சீரியலை முடித்தார் என்று பார்க்கும் பொழுது சன் டிவிக்கும் திருச்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் இந்த சீரியலை சீக்கிரம் முடித்துள்ளார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே மூன்று வருடத்திற்கு எதிர்நீச்சலின் கதை எப்படி போக வேண்டும் என்பதை திருச்செல்வம் எழுதி வைத்துவிட்டதாகவும் ஆனால் இந்த பிரச்சனையால்தான் அவர் சீக்கிரம் நிகழ்ச்சியை முடித்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டாம் பாக கதை:

இதனை தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் சீரியலை தொடர்வதற்கு வேறு டிவி சேனல்களிடம் திருச்செல்வம் பேசி வருகிறார். அடுத்து சீரியல் துவங்கும் பொழுது இந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரிய பெரிய தொழிலதிபர்கள் ஆக மாறி இருப்பார்கள்.
ஆனால் இவர்களை தோற்கடிக்க நினைத்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் எந்த சொத்துக்களும் இல்லாமல் நடுரோட்டில் நிற்பார் அந்த இடத்திலிருந்து குணசேகரன் இவர்களை பழிவாங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் தான் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்கள் இவரை எப்படி தடுக்க போகிறார் என்பதாக கதை இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
