TV Shows
கண்ணீர் விட்டு அழுதும் கேட்கல.. எதிர்நீச்சல் நடிகையை விலக்கிய திருச்செல்வம்.!
சன் டிவியில் ஆரம்பத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற தொடராக எதிர்நீச்சல் தொடர் இருந்தது. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்தது.
இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து என்கிற நடிகர் நடித்து வந்தார். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை சரிவரக் கொண்டு செல்ல முடியவில்லை.
அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார். அந்த தொடருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கின. எனவே பாதியிலேயே அந்த தொடர் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடருகிறது என்கிற இன்னொரு தொடர் சன் டிவியில் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
ஜனனி கதாபாத்திரமாக நடித்த நடிகைக்கு பதிலாக கூட இப்பொழுது வேறு நடிகைதான் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொடரில் நந்தினியின் மகளான தாரா என்கிற கதாபாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்து வந்தார்.
அவருக்கு பதிலாக இப்பொழுது வேறு நடிகை நடிக்கிறார். இது குறித்து தாரா தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும் பொழுது திருச்செல்வம் அங்கிள் வேண்டும் என்றே இந்த தொடரில் இருந்து என்னை நீக்கி விட்டார். இதற்காக நான் மிகவும் அழுதேன். ஆனாலும் அவர் மனம் மாறவில்லை என்று கூறி இருக்கிறார் தாரா.