போன பார்ட் அளவுக்கு இல்ல..! வேற லெவலா இருக்கு! – Fantastic Beast விமர்சனம்!

ஹாலிவுட்டின் பிரபல மாயாஜால படமான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளையும் பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜே.கே.ரோலிங். இவரது ஹாரி பாட்டர் கதைகள் படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிலையில் அதன் முன்கதையாக உருவாக்கப்பட்டு வெளியாகி வருகிறது பெண்டாஸ்டிக் பீஸ்ட் பாகங்கள்.

முன்னதாக வெளியான இரண்டு பாகங்களில் ஆல்பஸ் டம்பிள்டோர், கிரிண்டல்வால்ட் இடையே உள்ள ரத்த ஒப்பந்தம் குறுத்தும், இந்த விவகாரத்தில் மாய விலங்குகளை பாதுகாக்கும் நியூட் ஸ்கமாண்டர் உதவுவதும் விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் – டம்பிள்டோரின் ரகசியங்கள் பாகம் வெளியாகியுள்ளது.

இந்த பாகத்தில் கிரிஸ்டல்வால்டுடனான ரத்த ஒப்பந்தம் முறிந்து டம்பிள்டோர், உலகின் மிகப்பெரும் மந்திரவாதியான கிரிண்டல்வால்டை வீழ்த்துவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயமாந்திரீக அமைச்சகத்தால் கிரிண்டல்வால்டின் குற்றங்களை நிரூபிக்கமுடியாமல் போக விடுதலையாகும் கிரிண்டல்வால்ட் அமைச்சகத்தில் தலைமை பதவிக்கே போட்டியிடுகிறான்.

எதிர்காலத்தை கிரிண்டல்வால்டால் பார்க்க முடியும் என்பதால் ஸ்காமண்டர் உள்பட்ட குழுவை அமைத்து திட்டமிடாமலே கிரிண்டல்வால்டை எதிர்க்கிறார் டம்பிள்டோர். மாய அமைச்சக தேர்தலில் கிரிண்டல்வால்ட் ஜெயித்தானா அல்லது அவனை ஸ்கமாண்டர் குழு வீழ்த்தியதா என்பது விருவிருப்பான கதை.

ஆனால் சிறிய அளவிலான கதையை நீண்ட நேரம் இழுத்திருப்பது போன்ற திரைக்கதை அயற்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படங்களின் சிறப்பம்சமே அதில் வரும் வித்தியாச வித்தியாசமான மாய விலங்குகள்தான். ஆனால் இந்த படத்தில் மாய விலங்குகளுக்கான பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் மாயாஜால உலகை குழந்தைகளுடன் சென்று கண்டுகளிக்க ஏற்ற படமாக ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் – டம்பிள்டோரின் ரகசியங்கள் இருக்கும்.

Refresh