Connect with us

இப்ப உள்ள ஹீரோக்கள் அட்ராசிட்டி தாங்கல!.. எம்.ஜி.ஆர் அந்த விஷயத்தில்தான் கடவுள்தான்!.. கடுப்பான விநியோகஸ்தர்!..

MGR

Cinema History

இப்ப உள்ள ஹீரோக்கள் அட்ராசிட்டி தாங்கல!.. எம்.ஜி.ஆர் அந்த விஷயத்தில்தான் கடவுள்தான்!.. கடுப்பான விநியோகஸ்தர்!..

Social Media Bar

MGR : சம்பள விஷயம் என்பதுதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு எப்பொழுது ஓ.டி.டி முறை வந்ததோ அது முதலே தங்களது சம்பளத்தை எக்கசக்கமாக அதிகரித்து இருக்கின்றனர் தமிழ்நாட்டு கதாநாயகர்கள்.

இதனால் படத்தின் தயாரிப்பு செலவில் முக்கால்வாசி தொகை கதாநாயகர்களுக்கு சம்பளமாகவே சென்று விடுகிறது. அதிலும் அல்டிமேட் என்றால் கோட் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கொரானாவிற்கு முன்பு 100 கோடி தான் விஜயின் சம்பளமாக இருந்தது. அதுவே அதிகம் என்றாலும் கூட இப்படி இரண்டு மடங்காக சம்பளம் உயர்ந்தது கொரோனாவிற்கு பிறகுதான் என்று கூறப்படுகிறது. இப்படி கதாநாயகர்கள் சம்பளம் அதிகரிப்பது குறித்து சினிமா தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்.

MGR-3
MGR-3

அதில் அவர் கூறும் பொழுது அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிக்கும் போது அவரது சம்பவம் சம்பளம் 5000 ரூபாயாக இருந்தது. அந்த திரைப்படம் வெற்றி கண்ட பொழுது அவரது சம்பளம் 10,000 ரூபாயாக அதிகரித்தது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவரது சம்பளம் அதிகரித்தது அதிகபட்ச தொகையாக எம்ஜிஆர் சம்பளமாக வாங்கிய தொகை ஒரு லட்ச ரூபாய் அந்த திரைப்படம் பல லட்சம் ரூபாய்க்கு வெற்றி கொடுத்து பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அனைவருக்கும் லாபம் அளித்த பொழுதும் எம்.ஜி.ஆர் வாங்கிய தொகை ஒரு லட்ச ரூபாய்தான்.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை பத்து லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கும் ஒரு கதாநாயகன் அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அடுத்து ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகு அதே சம்பளத்தை 50 கோடியாக மாற்றுகிறார்.

பிறகு 100 கோடி ரூபாய் கேட்கிறார் இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் இதையெல்லாம் பார்க்கும் பொழுதுதான் இப்பொழுது எனக்கு எம்.ஜி.ஆர் தெய்வமாக தெரிகிறார் என்று ஓப்பனாக கூறி இருக்கிறார் ராஜன்.

To Top