Connect with us

ஆமா பாவம் நீயும் சோத்துக்கு என்ன பண்ணுவ!.. சத்யராஜை கலாய்த்து அனுப்பிய கவுண்டமணி!..

gaundamani sathyaraj

Cinema History

ஆமா பாவம் நீயும் சோத்துக்கு என்ன பண்ணுவ!.. சத்யராஜை கலாய்த்து அனுப்பிய கவுண்டமணி!..

Social Media Bar

Sathyaraj and Goundamani : தமிழ் சினிமா நடிகர்களில் கலர் சினிமா காலம் துவங்கியப்போது நகைச்சுவையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தவர்கள் நடிகர் கவுண்டமணியும் செந்தில் என கூறலாம். இறுதியாக சொக்கத்தங்கம் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தனர்.

அந்த திரைப்படத்திலேயே கூட அவர்களது காமெடியில் எந்த ஒரு குறைவையும் பார்க்க முடியாது. ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் எந்த ஒரு பிரபலத்திடமும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இப்படி வெளிப்படையான அவருது பேச்சு  பலருடன் அவருக்கு பகையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

நடிகர் கமல்ஹாசனுடன் கூட கவுண்டமணிக்கு சில பிரச்சனைகள் ஆகி அதன் பிறகு கமல்ஹாசன் தனது திரைப்படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பேச்சுக்கள் உண்டு. இவ்வளவு ஏன் அவரது நெருங்கிய நண்பரான சத்யராஜை கூட சமயத்தில் கலாய்த்து விடுவாராம் கவுண்டமணி.

sathyaraj gaundamani
sathyaraj gaundamani

இது குறித்து சத்யராஜ் ஒரு நிகழ்வை பகிர்ந்து உள்ளதாக நடிகர் சதீஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சத்யராஜ் ஒருமுறை விமான நிலையத்தில் இருந்த பொழுது அவருக்கு போன் செய்திருக்கிறார் கவுண்டமணி.

என்னப்பா என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஒரே சத்தமாக இருக்கிறது என்று கவுண்டமணி கேட்க நான் விமான நிலையத்தில் இருக்கிறேன் படப்பிடிப்பிற்கு செல்கிறேன் என்று கூறி இருக்கிறார் சத்தியராஜ்.

என்ன படம் என கவுண்டமணி கேட்கும் பொழுது சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற ஒரு பாலிவுட் திரைப்படம் என்று கூறி இருக்கிறார் சத்யராஜ். அது சரி நீயும் சோத்துக்கு என்ன பண்ணுவ என்று இதற்கு பதில் அளித்து சத்யராஜை கலாய்த்து இருக்கிறார் கவுண்டமணி.

அதை நகைச்சுவையாக சத்யராஜ் எடுத்துக் கொண்டாலும் அனைத்து நடிகர்களும் அப்படி எடுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே.. இதுதான் கவுண்டமணிக்கு மற்ற நடிகர்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்திய விஷயமாக இருக்கிறது.

To Top