Connect with us

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

News

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

Social Media Bar

வெகு காலங்களாகவே விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.

முக்கியமாக இது ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதெல்லாம் இல்லை படம் தனிப்பட்ட ஒரு கதையை கொண்டு எடுக்கப்படுகிறது என்று படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

GOAT Movie:

இதனை அடுத்து கோட் படத்தின் சர்ச்சை கொஞ்சம் அமைதியாகியிருந்தது. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

vijay GOAT

ட்ரெய்லர் வெளியானது முதலே அதற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வாழ்கின்றன. பலரும் படத்தின் டிரைலரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் யூட்யூபில் அதிகமான பார்வையாளர்களைப்  பெற்ற டிரைலராக கோட் திரைப்படத்தின் டிரைலர் மாறி இருக்கிறது.

விஜய் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட்டில் வெளியான ஜெமினிமேன் என்கிற திரைப்படத்தின் தழுவல்தான் கோட் என்று பேச துவங்கியிருக்கின்றனர்.

ஹாலிவுட் படம்:

ஜெமினிமேன் திரைப்படத்தின் கதையை பொருத்தவரை அதில் கதாநாயகன் இதே மாதிரியான ஒரு ரகசிய ஏஜெண்டாக இருந்து வருவார். இந்த நிலையில் அவரை யாராலும் எதிர்க்கொள்ள முடியாது அந்த அளவிற்கு திறமையான ஒரு ஏஜெண்டாக அவர் இருப்பார்.

ஆனால் அந்த நிறுவனம் ஒரு கட்டத்திற்கு மேல் ரகசியங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கொலை செய்வார்கள். அந்த வகையில் கதாநாயகனை கொலை செய்ய ஒரு நபரை அனுப்புவார்கள் .

அது யார் என்று பார்க்கும் பொழுது இளம் வயது கதாநாயகனாக இருப்பான் குளோனிங் முறையில் அவனை உருவாக்கி இருப்பார்கள். அந்த படத்தை வைத்துதான் கோட் என்று படமாக்கி இருக்கின்றனர். ஆனால் அதில் க்ளோனிங் முறையில் இருந்ததற்கு பதிலாக இதில் அப்பா மகன் என்று வைத்திருக்கிறனர் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

Articles

parle g
madampatty rangaraj
To Top