Connect with us

கோட் ரெண்டு நாள் வசூல் போட்ட காசை எடுத்தாச்சு!.. GOAT box office update

GOAT

News

கோட் ரெண்டு நாள் வசூல் போட்ட காசை எடுத்தாச்சு!.. GOAT box office update

Social Media Bar

கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் வெளியாகும் முன்பே இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தன.

முக்கியமாக விஜய் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது ஆர்வத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. அதிலும் ஒரு விஜய் வில்லன் என கூறப்படுகிறது. அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலேயே வில்லன் கதாபாத்திரம் அவ்வளவாக எடுப்படவில்லை என்பதால் இந்த படத்தில் அது எப்படி ஒர்க் அவுட் ஆகியுள்ளது என ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

box office update

அந்த வகையில் வெளியான கோட் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றுள்ளது. வெளியான முதல்நாளே இந்திய அளவில் 100 கோடியை வசூல் செய்தது கோட் திரைப்படம். உலக அளவில் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

GOAT

இந்த நிலையில் இரண்டாம் நாளாக நேற்றும் கிட்டத்தட்ட 68.75 கோடி வசூல் செய்துள்ளது கோட் திரைப்படம். படத்தின் தயாரிப்பு செலவு  400 கோடி வரை ஆகியுள்ளது. அந்த வகையில் இரண்டு நாட்களிலேயே படம் 200 கோடி கலெக்ட் செய்துள்ளது.

எனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top