அரசியல் வசனங்களை வைத்த வெங்கட் பிரபு.. GOAT Movie ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா

பொதுவாகவே வெங்கட் பிரபு எவ்வளவு அரசியல் ஜோக்குகள் அடிக்கக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் மணிவண்ணனை போலவே வெங்கட் பிரபுவும் காமெடி வாயிலாகவே நிறைய அரசியல் விஷயங்களை பேசக்கூடியவர்.

அதை அவரது பல முந்தைய படங்களிலும் நிறைய செய்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இதற்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

கோட் திரைப்படம்:

ஏனெனில் இதற்கு முன்பே மாநாடு என்கிற ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை எடுத்து சரியான வெற்றியை கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இதில் அரசியல் தொடர்பாக அவர் செய்திருக்கும் சில வேலைகளை பார்க்க முடிகிறது.

vijay GOAT
Social Media Bar

அதேபோல 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பு பெறுவதற்காக சில நாஸ்டாலஜிக்கல் ஆன விஷயங்களையும் கையாண்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் என்ட்ரி ஆகும்பொழுது உங்களை மீட் பண்ண போறது ஒரு புது லீடர் என்கிற வசனம் வருகிறது.

தமிழ் சினிமா:

விஜய்யின் அரசியல் என்று குறிப்பிடும் வகையில் இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது அதேபோல ஒரு காட்சியில் கில்லி திரைப்படத்தில் விஜய் மருதமலை மாமணியே முருகையா என்று பாடும் ஒரு காட்சி இருக்கும்.

அந்த காட்சியை அப்படியே ரீ கிரியேட் செய்திருக்கின்றனர் படகுழுவினர். கில்லி திரைப்படத்தில் அந்த காட்சியில் விஜய் அனிந்திருக்கும் அதே நிற ஆடையை இதிலும் அணிந்துள்ளார். சமீபத்தில்தான் கில்லி படம் வெளியாகி ரீசாகி நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தான் இந்த வேலையை படக்குழுவினர் பார்த்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இப்படியாக இந்த ட்ரைலரிலேயே குறியீடுகள் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக படத்தில் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.