Connect with us

இதுதான் கோட் படத்தின் கதை… ட்ரைலர் மூலமே படத்தின் கதை தெரிஞ்சுட்டு!..

vijay GOAT

Latest News

இதுதான் கோட் படத்தின் கதை… ட்ரைலர் மூலமே படத்தின் கதை தெரிஞ்சுட்டு!..

Social Media Bar

ரசிகர்களின் வெகுநாளைய காத்திருப்பிற்கு பிறகு தற்சமயம் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே கோட் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இதுவரை பணம் தொடர்பாக தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வந்தாலும் கூட அது அனைத்தையும் ஓரம் கட்டி விட்டது கோட் திரைப்படத்தின் டிரைலர் என்று கூறலாம்.

கோட் ட்ரைலர்

ஏனெனில் இந்த ட்ரெய்லர் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருக்கிறது. அந்த அளவிற்கான வேலையை படத்தில் பார்த்திருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தில் விஜய்யை பொறுத்தவரை வயதான விஜய்யின் கதாபாத்திரம்தான் படத்தின் கதாநாயகனாக இருக்கிறார்.

இவர் இளமை காலங்களில் பல முக்கிய குற்றங்களை கண்டுபிடித்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த விஜய்க்கு 35 வயதாக இருக்கும் காலகட்டத்தில் நடக்கும் கதை என்று தனியாக ஒரு கதையாக படத்தில் வருகிறது.

அதன்படி அந்த சமயத்தில் அவர் செய்த ஒரு ஆபரேஷனில் நடிகர் மோகன் பாதிக்கப்படுகிறார். அதற்காக இவர் விஜய்யை பழிவாங்க காத்திருக்கிறார். இந்த நிலையில் வயதான பிறகு இந்த உளவுத்துறையை விட்டு விலகி இருக்கும் விஜய்க்கு அதனால் பிரச்சனைகள் வர துவங்குகிறது.

இரண்டாம் பாதி:

இந்த சமயத்தில் அவரை காப்பாற்ற அவரது மகன் விஜய் என்று கொடுக்கிறார். அவர்தான் டி.ஏஜிங் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் விஜய் கதாபாத்திரம் ஆகும். தந்தை எவ்வளவு பெரிய ஆள் என்பது ஒரு அளவுக்குப் பிறகுதான் படத்தில் தெரிகிறது.

கோபமாகும் வயதான விஜய் ஒரு கட்டத்திற்கு பிறகு களத்தில் இறங்குகிறார். பிறகு இறங்கி செய்யும் மாஸ் விஷயங்களே படத்தின் கதையாக இரண்டாம் பாதியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான ஆவல் இன்னமுமே அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இந்த ட்ரெய்லரும் அதிகமாக வைரலாகி வருகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top