Connect with us

ரஷ்யா மீது கை வைத்த கூகுள்.. இடியை இறக்கிய ரஷ்யா.. அப்ப கூகுளின் நிலைமை?

google

Latest News

ரஷ்யா மீது கை வைத்த கூகுள்.. இடியை இறக்கிய ரஷ்யா.. அப்ப கூகுளின் நிலைமை?

உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனை என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஓய்ந்து விட்டதாக பேச்சுக்கள் இருந்தாலும் அதில் எந்த விதமான சமதானமும்  இப்பொழுது வரை நிகழவில்லை.

எதிரி நாடுகள் எல்லாம் இன்னமும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன முக்கியமாக இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன.

இப்போது வரை அது அப்படியே நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட சீனா மாதிரியாக முற்றிலுமாக அமெரிக்காவை புறக்கணிக்காமல் அதன் ஒரு சில தயாரிப்புகளை ரஷ்யா பயன்படுத்தி தான் வருகிறது.

ரஷ்யாவுடன் வந்த பிரச்சனை

அப்படியாக ரஷ்யா கூகுள் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் தனது நாட்டில் அனுமதித்து இருக்கிறது youtube மாதிரியான google இன் அனைத்து அம்சங்களும் ரஷ்யாவிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் youtube google நிறுவனம் ரஷ்யாவின் அரசுக்கு ஆதரவாக இருக்கும் youtube சேனல்கள் அனைத்தையும் தடை செய்தது கூகுள் நிறுவனம். ரஷ்யா டைம்ஸ் உட்பட பல பிரபலமான யூடியூப் சேனல்கள் இந்த தடையால் பெரும் நஷ்டத்தை அடைந்தன.

இந்த நிலையில் இதனால் கோபம் அடைந்த ரஷ்யா இதற்கு பதிலடி கொடுக்கத் துவங்கியிருக்கிறது. இது தொடர்பாக ரஷ்யா வழக்கு ஒன்றை தொடர்ந்தது. மாஸ்கோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் ரஷ்யாவிற்கு இழப்பீடாக கூகுள் 20 டெசிலியன் டாலர்களை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது 20 டெசிலியன் டாலர்கள் என்பது இரண்டுக்கு அருகில் 26 பூஜ்ஜியங்கள் கொண்ட தொகை ஆகும்.

அந்த அளவு பணம் மொத்த google நிறுவனத்திடமே கிடையாது ஒருவேளை அந்த அபராதத்தை வழங்காத நிலையில் ரஷ்யாவில் மொத்தமாக கூகுள் தொடர்பான தயாரிப்புகளுக்கு தடை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது ரஷ்ய அரசு.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top