விஜய் சேதுபதி அபிஷேக் கூட்டணியில் அடுத்த படம்! – அடுத்தப்படத்திற்கு தயாராகும் கெளதம் மேனன்!

தமிழில் எப்போதும் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் கெளதம் மேனன். கெளதம் மேனன் இயக்கும் திரைப்படங்கள் தனியான ஒரு ஸ்டைலை கொண்டிருப்பதால் எப்போதும் அவரது திரைப்படம் மட்டும் நமக்கு தனியாக தெரியும்.

Social Media Bar

இறுதியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து ஒரு சின்ன கேப் விட்டு அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் கெளதம் மேனன்.

இந்த படத்தை த்ரில்லராக இயக்க திட்டமிட்டுள்ளார். அபிஷேக் பச்சன், விஜய் சேதுபதி இருவரிடமும் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியும் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.