Connect with us

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

sri devi boney kapoor

Cinema History

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

Social Media Bar

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக தொண்ணூறுகளில் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி இன்னொரு பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானார். பின்னர் அங்கிருந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இந்தியிலேயே செட்டில் ஆனார்.

இந்தியில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 24 அன்று துபாயில் இருந்த நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து போனி கபூர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து வாய் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ஸ்ரீதேவி தன் உடல்வாகுவை அழகாக காட்சிப்படுத்த கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக ஸ்ரீதேவி உப்பு இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்ததாகவும் இதனால் பலமுறை அவர் மயங்கி விழுந்துள்ளதாகவும் போனிக் கபூர் கூறியுள்ளார்.

“ஸ்ரீதேவிக்கு ரத்த அழுத்த குறைவு பிரச்சனையும் இருந்தது டாக்டர்கள் எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சீதேவி தொடர்ந்து இந்த உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தார்

ஸ்ரீதேவி இயற்கையாக மரணம் அடையவில்லை தவறி விழுந்து தான் இறந்தார். அன்று துபாய் போலீசார் என்னை ஒரு நாள் முழுவதும் விசாரித்தார்கள். எனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி இறந்த சில நாட்கள் கழித்து என்னை சந்தித்த நாகார்ஜுனா படப்பிடிப்பின் போது கடுமையான உணவு கட்டுப்பாடு இருந்து ஸ்ரீதேவி மயங்கி விழுந்ததை என்னிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top