விபத்துக்குள்ளான அவெஞ்சர்ஸ் நடிகர் ! – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அவெஞ்சர்ஸ் திரைப்படம் மற்றும் ஹாக்கய் தொடர் போன்றவை மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகர் ஜெரெமி ரென்னர்.

பல திரைப்படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான த ஹர்ட் லாக்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான ஹாக்கய் என்ற வில் வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வந்த ஹாக்கய் டிவி தொடரில் புது ஹாக்கய் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திவிட்டு அவெஞ்சர்ஸ் சீரிஸில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இன்று காரில் சென்று கொண்டிருந்த ஜெரெமிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. ரோஸ் கி தஹோ மவுண்ட் என்னும் பகுதியில் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். இப்போது பனிக்காலம் என்பதால் அங்கு அதிகமாக பனி பெய்யும். ரோட்டில் அதிகமான பனி இருந்த காரணத்தால் அவரது கார்  வலுக்கி சாலையோரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அதிகமாக படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உடல்நிலை சீராக உள்ளதால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். பாலிவுட் நடிகர் அணில் கபூர் அவர் சீக்கிரம் சரியாகி வர வேண்டும் என கூறியுள்ளார்.

Refresh