Connect with us

திரைப்படமாகும் மைக்கேல் ஜாக்சன் கதை! – தம்பி மகனே நடிக்கிறாராம்!

Hollywood Cinema news

திரைப்படமாகும் மைக்கேல் ஜாக்சன் கதை! – தம்பி மகனே நடிக்கிறாராம்!

Social Media Bar

உலக அளவில் நடனத்தில் பெரும் புரட்சியை செய்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன். மைக்கேல் ஜாக்சன் நடனங்களை பார்க்காதவர்களுக்கு கூட அவர் ஒரு நடன கலைஞர் என்பது தெரிந்திருக்கும்.

ஒரு சாதரண குடும்பத்தில் இருந்து வந்து பெரும் சாதனைகளை செய்த ஒரு நடன கலைஞர் இவர். இப்போது பலரும் அவரை ஒரு உதாரணமாக கொண்டே நடனங்களை கற்று வருகின்றனர். சின்ன வயதில் இருந்தே ஆடல் பாடல் மீது நாட்டம் கொண்டவர் மைக்கேல் ஜாக்சன்.

ஆனால் மிகவும் மர்மமான முறையில் இறந்து போனார் மைக்கேல் ஜாக்சன். இப்போது வரை அவரது மரணம் இயற்கை மரணமா? அல்லது கொலையா என்பது கண்டறிய முடியாத விஷயமாகவே உள்ளது.

இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கலாம் என ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். பிரபல நிறுவனமான லயன்ஸ்கேட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சனின் தம்பி மகனான ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. விரைவில் படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top