லயன் கிங் முஃபாசா எப்படி இருக்கு.. அர்ஜுன் தாஸ் குரலுக்கே தனி மார்க்கு.. பட விமர்சனம்..!
இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் சிங்கங்களின் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் லயன் கிங் லயன் கிங். டிஸ்னி நிறுவனத்தால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது
அப்போது இருந்த சமயத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது இந்த படம். முதன் முதலாக வந்த லயன் கிங் கதையில் சிம்பா என்கிற ஒரு சிங்கத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் கதைக்களம் செல்லும்.
சிறுவயதிலேயே தனது தந்தையின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைக்கும் சிம்பா காட்டை விட்டு விலகி செல்கிறது. ஸ்கேர் எனப்படும் வேறு ஒரு கொடூரமான சிங்கத்தின் ஆதிக்கத்திற்கு காடு வருகிறது.
முஃபாசா கதை:
இந்த நிலையில் திரும்ப அது காட்டை மீட்டெடுத்து தனக்கான உரிமையை சிம்பா பெறுவது தான் திரைப்படத்தின் கதையாக இருந்தது. இது ஏற்கனவே தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் டிமான் பும்பா என்கிற இரண்டு கதாபாத்திரங்களுக்கு சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் டப்பிங் செய்திருந்தது சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் இரண்டாம் பாகமாக சிம்பாவின் தந்தை முஃபாசாவின் கதையை படமாக்குகின்றனர். முஃபாஷா முதன்முதலாக இந்த காட்டுக்கு எப்படி வந்தது? வந்த பிறகு அதை எப்படி ராஜாவாக மாறியது என்பதுதான் இந்த திரைப்படத்தின்.
கதை தற்சமயம் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் பொழுது சிம்பா முதலில் வந்த லைன் கிங் திரைப்படத்தை விட முஃபாஷா திரைப்படம் இன்னமுமே சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக முபாஷா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாசின் குரல் சிங்கத்தின் கர்ஜனை போலவே அமைந்திருக்கிறது.
கிராபிக்ஸ் தொழில்நுட்பத்திலும் பின்னி எடுத்து இருக்கின்றனர் படக் குழுவினர் என்று கூறுகின்றனர் விடுதலை 2 வெளியான அதே நாளில் இன்று முஃபாஷா படமும் வெளியாகி இருக்கிறது விடுதலை 2 திரைப்படம் சிறுவர்களுக்கு பார்க்க உகந்த திரைப்படம் கிடையாது என்பதால் சிறுவர்கள் பார்ப்பதற்கு இந்த கிறிஸ்மஸ்க்கு தகுந்த படமாக முஃபாஷா திரைப்படம் அமைந்திருக்கிறது.