Cinema History
ஓவர் நைட்ல ஸ்டாரான சூப்பர் ஸ்டார், இவருனால மட்டும் எப்படி முடியுது இதெல்லாம்?…
Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 170க்கு அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த படம் கதை சரியில்லை என்றாலும் அவருடைய ரசிகர்களே நிச்சயம் அந்த படத்தை ஓட வைத்துவிடுவார்கள் என்றுதான் கூற வேண்டும்.
அவருடைய ஓடாத படங்களே குறைந்தது 50 நாட்கள் திரையரங்கில் ஓடியிருக்கும் அவ்வளவு ரசிகர் கூட்டம். வயசானாலும் “ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னை விட்டுப் போகல” வசனம் போலவே இந்த வயதிலும் அதற்கேற்ப கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரஜினி.
தற்போது தலைவர்-171 படத்தின் படபிடிப்பு நடைபெற்றுவருகிறது. ரஜினிகாந்த நடித்து மெகாஹிட் என்றால் பல படங்கள் கூறலாம்.
ஒன்றல்ல இரண்டல்ல நூறுக்கு மேற்பட்ட படங்கள் நூறு நாள், நூற்றைம்பது நாள் என்று மெஹா கிட் கொடுத்த படங்கள். அந்த படங்களின் வரிசையில் தர்மதுரை படமும் ஒன்று.
இந்தப்படம் உருவானது ஒரு நாள் இரவில் மட்டுமே அதெப்படி? ஆம், அதற்கு முன் அந்த படத்தின் தலைப்பு “காலம் மாறிப்போச்சு”. படப்பிடிப்பு ஆரம்பித்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் ரஜினிக்கு கதையில் திருப்தி இல்லை அதனால் கதையை மாற்றச்சொல்லிவிட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பின்பு ஒரு நாள் இரவில் மலையாளப்படம் ஒன்றின் தமிழ் படைப்பை உருவாக்க நினைத்து எடுக்கப்பட்ட படம் தான் தர்மதுரை. அந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைப்போலவே பல படங்கள் ரஜினியின் யோசனையில் வெற்றிப்படமாக உருவாகியிருக்கிறது.
படப்பிடிப்பில் தன்னுடைய கருத்தை தேவையான இடத்தில் தேவையான முறையில் எடுத்துச் சொல்வார். அவருடைய கருத்துக்களை கேட்காத இயக்குனர்கள் யாராவது இருப்பார்களா என்ன?
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்