Connect with us

பார்த்திபனை அவமானப்படுத்திய இளையராஜா.. அவர் செஞ்சது தப்பு.. விளக்கம் கொடுத்த பார்த்திபன்!..

Cinema History

பார்த்திபனை அவமானப்படுத்திய இளையராஜா.. அவர் செஞ்சது தப்பு.. விளக்கம் கொடுத்த பார்த்திபன்!..

Social Media Bar

தமிழ் இசையமைப்பாளர்களில் மிக பிரபலமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி அவர் இசையமைத்த முக்கால்வாசி படங்களில் பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன.

இதனால் அனைத்து இயக்குனர்களும் அப்போது அவர்தான் தங்களது திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என நினைத்தனர். இதில் ராஜ்கிரண் மாதிரியான சிலர் ஒருப்படி மேலே போய் பட போஸ்டர்களிலேயே இளையராஜாவின் புகைப்படத்தை பெரிதாக போட துவங்கினர்.

இப்படியெல்லாம் பல புகழ்களை பெற்றவராக இருந்தாலும் இளையராஜா மீது சில அவதூறு பேச்சுக்களும் உள்ளன. அவர் மிகவும் திமிரானவர், அவரது தம்பி கங்கை அமரனுடனேயே போட்டி போட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தாலும் இன்றும் அவருக்கான வரவேற்பு குறையவில்லை என்றே கூறலாம்.

ஒரு முறை மேடையில் இளையராஜாவும் பார்த்திபனும் பேசி கொண்டிருக்கும்போது இளையராஜா பார்த்திபனை பார்த்து உனக்கு இசையை பற்றி என்ன தெரியும் என கேட்டுவிட்டார். இது பார்த்திபனுக்கு மிகவும் மன கஷ்டமாக போய்விட்டது.

ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவர் கூறும்போது  அவர் சொன்னது தப்புதான் ஆனால்  அது எனக்கு உறுத்தலாக இருந்த மாதிரியே அந்த நிகழ்வு  இளையராஜாவிற்கும் கூட நெருடலாக இருந்துள்ளது. ஒருமுறை அதுக்குறித்து அவர் பேசும்போது நான் உன்னிடம் இசையை பற்றி என்ன தெரியும் என நான் கேட்டால் பதிலுக்கு நீயும் என்னை கேட்க வேண்டியதுதானே. ஏனெனில் நானே முறையாக இசையை கற்றுக்கொண்டு வந்தவன் கிடையாதே என கூறியுள்ளார் இளையராஜா.

To Top