Connect with us

இந்த மாதிரி பாட்டு போடுறது வேஸ்ட்டு… அனிரூத்தை நேரடியாக வைத்து செய்த இளையராஜா..!

anirudh ilayaraja

News

இந்த மாதிரி பாட்டு போடுறது வேஸ்ட்டு… அனிரூத்தை நேரடியாக வைத்து செய்த இளையராஜா..!

Social Media Bar

ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் தனக்கென தனி ஸ்டைலை கொண்டிருப்பது போல இளையராஜாவும் தனக்கென தனி பாணியை கொண்டவர்.

அதிகபட்சம் எலக்ட்ரானிக் இசைக்கருவிகளை இளையராஜா தன்னுடைய பாடல்களில் பயன்படுத்த மாட்டார். இதை பலமுறை அவர் பேட்டியில் கூறியும் இருக்கிறார். முன்பெல்லாம் இசை என்பது எலக்ட்ரானிக்கல் கருவிகள் வருவதற்கு முன்பு சரியாக இருந்தது.

இளையராஜா படங்கள்:

அதை சரியான வழியில் பயின்று பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது இந்த கருவிகளின் உதவியால் எளிமையாக இசையமைக்க முடியும் என்பதால் கடினமான கருவிகளை பயன்படுத்துவதற்கு பயப்படுகின்றனர் என்று வெளிப்படையாகவே நிறைய இடங்களில் பேசியிருக்கிறார் இளையராஜா.

ilayaraja-1
ilayaraja-1

இதற்கு நடுவே ஒரு நேர்காணல் ஒன்றில் இளையராஜாவிடம் பேசும்போது ஒரு பாடலின் வரிகளை குறித்து பேசி வந்தனர். அப்பொழுது பேசிய இளையராஜா கூறும்பொழுது பாடல் வரிகள் அந்த காலகட்டங்களில் எல்லாம் தனித்துவமாக இருந்தது.

இளையராஜா கூறிய விஷயங்கள்:

அவர்கள் கவிதைகளை பாடல் வரிகளாக கொடுத்து வந்தனர். அதனால் அதனோடு இசையும் சேரும்பொழுது ஒரு சிறப்பான கருத்தை மக்கள் மத்தியில் முன்வைக்க இசை ஒரு முக்கிய கருவியாக இருந்தது. இசையை பொருத்தவரை அது ஒரு அர்த்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாத இசை பயனற்றது என்று கூறியிருந்தார் இளையராஜா இப்பொழுது அனிருத் மாதிரியான இசைமைப்பாளர்கள் போடும் இசை அப்படித்தான் இருக்கிறது. அந்த பாடல் வரிகள் என்ன அர்த்தத்தை கூறுகின்றன என்பது தெரியாததாக இருக்கிறது.

மேலும் நல்ல கவிதைகளை எல்லாம் இப்பொழுது பாடல் வரிகளாக மாற்றுவது கிடையாது அந்த வகையில் இளையராஜா பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது இப்போதைய இசைகள் பயனற்றவையாக இருக்கின்றன என்று கூறி அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top