Connect with us

தனுஷிற்கு பாட சொல்லி கொடுத்த இளையராஜா! – ட்ரெண்டாகும் விடுதலை வீடியோ!

News

தனுஷிற்கு பாட சொல்லி கொடுத்த இளையராஜா! – ட்ரெண்டாகும் விடுதலை வீடியோ!

Social Media Bar

வெற்றி மாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு தயாராகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரமாக வருகிறார்.

இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். போலீசாய் இருக்கும் சூரி குற்றவாளியான விஜய் சேதுபதியை பிடிக்க செல்வதில் இருந்து கதை செல்வதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் உன்னோட நடந்தா என்கிற பாடலை தனுஷ் பாடுகிறார். இந்த பாடல் வருகிற பிப்ரவரி 8 அன்று வெளியாக இருக்கிறது. அதற்கு ஒரு ப்ரோமோ தற்சமயம் வெளியாகியுள்ளது.

அதில் அந்த பாடலை எப்படி பாட வேண்டும் என இளையராஜா தனுஷிற்கு கற்று தர அப்படியே அந்த பாடலை பாடுகிறார் தனுஷ். இளையராஜா, சூரி ஆகியோர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்சமயம் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

To Top