Movie Reviews
சேனாபதியின் அப்பாவும் வராறா? எப்படியிருக்கு இந்தியன் 2 திரைப்படம்- சுருக்கமான விமர்சனம்!..
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படங்களில் இந்த திரைப்படமும் முக்கியமானது.
2018 ஆம் ஆண்டு 2.0 திரைப்படம் வெளியான பிறகு இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை படமாக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அந்த வகையில்தான் இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகம் தற்சமயம் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை:
படத்தில் கல்லூரி மாணவரான சித்தார்த் ஒரு யூ ட்யூப் சேனல் நடத்துகிறார். அவர் தொடர்ந்து சமூகத்தில் நடந்து வரும் ஊழல் தொடர்பான விஷயங்களை அதில் பதிவேற்றி வருகிறார்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். ஆனால் தனி ஒருவன் திரைப்படத்தில் வருவது போல இவர்கள் எல்லோருமே பிறகு சிறையில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியன் தாத்தா சேனாபதி வந்தால்தான் இதை சரி செய்ய முடியும் என நம்புகிறார் சித்தார்த். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் எல்லாம் கம் பேக் இந்தியன் என ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்கிறார்கள்.
அதனை தொடர்ந்து இந்தியன் தாத்தாவும் வருகிறார். பிறகு அவர் செய்யும் விஷயங்கள் படமாக செல்கிறது. நாட்டை சுத்தம் செய்யும் முன் முதலில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் மனம் வைத்தால்தான் ஊழல் அற்ற அரசை உருவாக்க முடியும் என்கிறது இந்தியன் 2 படம்.
அடுத்த பாகத்தில் சேனாபதியின் அப்பா கதையும் வர இருப்பதாக கூறப்படுகிறது.
நெகட்டிவ் விஷயங்கள்:
படத்தை 3 மணி நேரத்திற்கு எடுத்திருப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது.
அடுத்து அனிரூத் இசை. எப்படி பார்த்தாலும் ரகுமானின் இசைக்கு ஈடு செய்யும் வகையில் அனிரூத் இசை இல்லை. இந்தியன் முதல் பாகத்தில் இசை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்