Connect with us

பொது மக்களுக்காக சொத்துக்களை இழந்த இந்திய கோடீஸ்வரர்.. இல்லனா இந்நேரம் அம்பானிய ஓரம் தள்ளி இருப்பாரு..!

ratan tata

News

பொது மக்களுக்காக சொத்துக்களை இழந்த இந்திய கோடீஸ்வரர்.. இல்லனா இந்நேரம் அம்பானிய ஓரம் தள்ளி இருப்பாரு..!

Social Media Bar

Ratan Tata: சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் பற்றி தான் இன்று உலகெங்கிலும் பேச்சாக உள்ளது. அந்த அளவிற்கு உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.

ஆமாம் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி. அவரின் வீட்டு திருமணம் இவ்வாறு நடக்கிறது. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று அனைவருக்கும் தோன்றும்.

உலக பணக்கார பட்டியலில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி அவரின் வீட்டு திருமணத்தை இவ்வாறு பிரமாண்டமாக செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் அம்பானியை விட பெரிய பணக்காரர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். ஆனால் ஏன் அவர் உலக பணக்கார பட்டியலில் இடம் பிடிக்கவில்லை? என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

ரத்தன் டாடா என்னும் பணக்காரர்

ரத்தன் டாடா, டாடா​ சன்ஸ்ஸின் முன்னாள் தலைவரும் மற்றும் இந்திய தொழில் அதிபரும் ஆவார். இவர் டாட்டா குழுமத்தின் தலைவராக கடந்த 1990 முதல் 2000 வரை இருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய குடிமகனுக்கான மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் 2008 ஆம் ஆண்டு உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றார்.

tatan tata

கிட்டத்தட்ட 29-க்கும் மேற்பட்ட கம்பெனிகளை வைத்துள்ள ரத்தன் டாடா, அம்பானி வைத்திருக்கும் கம்பெனிகளை விட அதிகமானது. இருந்த பொழுதும் ரத்தன் டாடா, ஏன் பணக்காரப் பட்டியலில் இடம்பெறவில்லை? என்பது அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

பெரும் பணக்காரரான ரத்தன் டாடா

இவ்வாறு அம்பானி குடும்பத்தை விட அதிக அளவு நிறுவனங்களை நடத்தி வரும் ரத்தன் டாடா குழுமம். உலக பணக்கார பட்டியலில் இடம் பிடிக்காததற்கான காரணம் டாடா தனக்கு வரும் வருமானத்தில் சுமார் 60 லிருந்து 65 சதவீதம் தொண்டுக்கு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறார்.

அந்த வகையில் இவர் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் நன்கொடை ஆனது உலக பணக்கார பட்டியலில் இடம் பிடித்திருக்கும் அம்பானியின் சொத்துக்களை விட அதிகமானது. எனவே தான் டாடா உலக பணக்காரப் பட்டியலில் இடம் பிடிக்காமல் தனக்கு வரும் வருமானத்தில் 65 சதவீதம் ஏழை எளிய ஊனமுற்றவர்களுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார்.

Ratan tata

இதனால் மக்களின் மனதில் அவர் பெரும் பணக்காரராக வாழ்ந்து வருகிறார். அவர் நினைத்தால் உலக பணக்கார பட்டியலில் இடம் பிடிக்கலாம். ஆனால் டாடா சொத்துக்களை சேர்த்து வைக்காமல், அதனை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
To Top