Latest News
மளிகை சாமான் வாங்க கூட காசு இல்லை.. கண்ணீர் விட்ட நடிகரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.ஜி.ஆர்!.
MGR: ஒரு சில நடிகர்கள் சினிமாவில் மட்டும் நடிகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நடிகராக இருப்பவர். அந்த வகையில் இன்றளவும் தமிழக மக்களின் மனதை விட்டு நீங்காத ஒரு நடிகர் என்றால் அவர் எம் ஜி ராமச்சந்திரன். எம்ஜிஆர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, அவர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றதற்கு காரணம் அவர் சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல் நிஜத்திலும் நடிகராக வாழ்ந்து மக்களுக்கு பல உதவிகளை செய்து இன்றும் அவர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.
அவரைப் பற்றி ஒவ்வொரு நடிகரும் அவர்களுக்கு தெரிந்த ஒவ்வொரு தகவலையும் கூறும் பொழுது எம் ஜி ராமச்சந்திரன் இவ்வளவு பெரிய மாமனிதரா என்று நமக்கே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு எண்ணற்ற உதவிகளை செய்து இருக்கிறார்.
அந்த வகையில் எம்ஜிஆர் சக நடிகரான ஒரு வைரல் கிருஷ்ணராவ் என்ற நடிகருக்கு அவர் செய்த உதவியை பற்றி ஒரு சுவாரசிய தகவல் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது அதை பற்றி காண்போம்.
ஒரு வைரல் கிருஷ்ணா ராவ்.
60களின் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆக தமிழ் மொழி படங்களில் நடித்தவர். இவர் தமிழில் நடித்த முதல் படத்திற்காக தான் இந்த ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என்ற புனைபெயரை பெற்றார். அப்பொழுது முதல் அவரை அனைவரும் ஒரு விரல் கிருஷ்ணராவ் என்று தான் அழைப்பார்கள்.
இவர் மாநில அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். மேலும் இவர் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர் செய்த அதிர்ச்சி சம்பவம்
அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலமாக இருந்தாலும் கிருஷ்ணர் அவர்களுக்கு சற்று வறுமை இருந்தது.
அப்பொழுது அவர் யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்தபோது எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு போன் செய்து, என்னுடைய பெயர் ஒருவிரல் கிருஷ்ணாராவ் நான் ஒரு சிறிய நடிகர் ஆவேன் என கூறினார்.
அதற்கு எம்ஜிஆர் உங்களைப் பற்றி எனக்கு தெரியும் கூறுங்கள் என்ன விஷயம் என கேட்டார் அப்பொழுது நான் இந்த மாதம் எனக்கு சற்று சிரமமாக இருக்கிறது எனவே நீங்கள் ரூபாய் 250 கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என உதவி கேட்டுள்ளார்.
அதற்கு எம்ஜிஆர் அப்படியா சரி நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினார். மறுநாள் கிருஷ்ணாராவ் அங்கு சென்றபோது எம்ஜிஆரின் உதவியாளர் அவரை அழைத்து நீங்கள் தானே கிருஷ்ணாராவ் இங்கு வாருங்கள் என கூப்பிட்டார்.
ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என கிருஷ்ணாராவ் கேட்க, எம் ஜி ராமச்சந்திரன் இந்த பையை உங்களிடம் கொடுக்க சொன்னார் என கூறினார். அந்தப் பையன் திறந்து பார்த்தால் அதில் 2000 ரூபாய் இருந்தது.
கிருஷ்ணாராவுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியமாக இருந்தது. ஏனென்றால் நான் அவரிடம் 200 ரூபாய் மட்டும் தான் கேட்டேன் ஆனால் அவர் எனக்கு 2000 ரூபாய் கொடுத்தார் அது எனக்கு அப்பொழுது பெரும் உதவியாக இருந்தது என கூறியிருக்கிறார்.