Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
itachi-uchiha

itachi-uchiha

கென் ஜுட்ஸுவின் ராஜாவான இட்டாச்சி உச்சிஹாவிற்கு இருக்கும் சக்திகள்!..

by Raj
April 18, 2024
in Anime
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நருட்டோ சீரிஸில் மிகவும் சக்திவாய்ந்த ஷினோபியாக அறியப்படுபவன் இட்டாச்சி உச்சிஹா. தனது 10 ஆவது வயதிலேயே ஜுனின் தேர்வில் வெற்றி பெற்று 12 ஆவது வயதிலேயே ஆன்பு ப்ளாக் ஆப்ஸ் குழுவின் கேப்டன் ஆகிறான் இட்டாச்சி உச்சிஹா.

நருட்டோவில் அதிகமான சக்திக்கொண்ட இட்டாச்சியின் சக்திகளை வரிசையாக பார்க்கலாம்.

சக்ரா சக்திகள்:

மற்ற ஷினோபிகளுடன் ஒப்பிடும்போது அபரிவிதமான சக்ரா சக்திகளை கொண்ட ஒருவனாக இட்டாச்சி இருக்கிறான். நருட்டோ யுனிவர்சில் இந்த மாதிரியான சக்தி கொண்ட ஒரு சிலர் இருக்கின்றனர். மினாட்டோ, ஜராயா போன்ற ஒரு சிலருக்கு இந்த மாதிரி அபரிவிதமான சக்ரா சக்திகள் உண்டு.

இதனால் உச்சிஹா இனத்தின் மிக சக்தி வாய்ந்த பவரான மாங்கேக்கு ஷாரிங்கானை கூட மூன்று முறைகள் இட்டாச்சியால் செய்ய முடியும்.

நின் ஜுட்ஸு:

இட்டாச்சியால் காகத்தை உருவாக்க முடியும். பொதுவாக எதிரிகளோடு சண்டையிடும்போது அவர்களிடம் காகத்தை பயன்படுத்தி கவனத்தை திசை திருப்புவான் இட்டாச்சி. நருட்டோ போலவே இட்டாச்சியாலும் அதிகமான மல்டி ஷேடோ க்ளோன்களை உருவாக்க முடியும். ஷேரிங்கானை பயன்படுத்தி இட்டாச்சியால் ஒருவரை சிறை வைக்க முடியும்.

பாக்கிஜுட்சு:

ஒரே நேரத்தில் எட்டு வெவேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்தவன் இட்டாச்சி. இதே மாதிரியான சக்தி நான்காவது ஹொக்காகேவான மினாட்டோவிற்கும் உண்டு. இதை ஷுருக்கேன் ஜுட்ஸு என அழைப்பார்கள். மேலும் காற்றில் பறந்துக்கொண்டே இட்டாச்சியால் இதை செய்ய முடியும்.

இயற்கை சக்திகள்

 ஒவ்வொரு திறன் வாய்ந்த ஷினோபியாலும் இரண்டு இயற்கை பூதங்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இட்டாச்சியை பொறுத்தவரை நெருப்பு, தண்ணீர், காற்று, இன் மற்றும் யாங் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும். யுச்சிஹாவின் சிறப்பு சக்தியான க்ரேட் ஃபயர் பால் டெக்னிக்கில் தேர்ச்சி பெற்றவர் இட்டாச்சி. நீர் சக்தியை பொறுத்தவரை வாட்டர் ட்ராகன் புல்லட் டெக்னிக்கை தண்ணீரே இல்லாமல் இட்டாச்சியால் பயன்படுத்த முடியும்.

கென் ஜுட்சு:

கென் ஜுட்ஸுவின் ராஜா என அழைக்கப்படுபவர் இட்டாச்சி உச்சிஹா. இட்டாச்சியின் கண்களை பார்க்கும் எவரும் எளிதாக அவரின் கென் ஜுட்ஸுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட முடியும். மிகவும் சக்தி வாய்ந்த கென் ஜுட்ஸுவால் எதிரியை இவன் நிலை குலைய செய்துவிடுவான். இட்டாச்சியின் கென் ஜுட்ஸு எதிரியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்க கூடியது.

தொலை தூரத்தில் இருக்கும் நபர்களை கூட தனது கென் ஜுட்ஸுவால் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவர் இட்டாச்சி. காபுட்டோவால் ரினேமினேஷன் ஜுட்சு மூலமாக உயிர் பெற்று வரும் இட்டாச்சி தனது கென் ஜுட்சு மூலமாக காபுட்டோவின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்துவிடுவார். அந்த அளவிற்கு கென் ஜுட்சுவில் வல்லமை கொண்டவன் இட்டாச்சி.

டூ ஜுட்சு:

தன்னுடைய 8 ஆவது வயதிலேயே ஷாரிங்கான் சக்தியை பெற்றுவிட்டான் இட்டாச்சி, அவனுடைய குழுவை சேர்ந்த டென்மா இசுமோ இறப்பின் காரணமாக அவனுக்கு அந்த சக்தி எழுப்பப்பட்டது. குறைந்த அளவிலான சக்ராவை வைத்து கூட ஷாரிங்கானை பயன்படுத்தும் வல்லமை கொண்ட ஒரே ஷினோபி இட்டாச்சி மட்டுமே. ஷாரிங்கானை பயன்படுத்தி ஒருவரின் சக்ரா அளவு, அவர் சண்டையிடும் விதம் அனைத்தையும் இட்டாச்சியால் பார்க்க முடியும்.

இட்டாச்சியின் ஷாரிங்கான் கண்களுக்கு முன்பு எந்த ஒரு ஜுட்சுவை பயன்படுத்தியும் ஜெயிப்பது அரிது.

அமதராசு:

மாங்கிக்கோ ஷேரிங்கான் மூலமாக கருப்பு நிற நெருப்பு ஒன்றை இட்டாச்சியால் பயன்படுத்த முடியும். இந்த நெருப்பு அணையாத நெருப்பாகும். அது யார் மீது படுகிறதோ அவர்கள் மீது பரவி மொத்தமாக அழித்துவிடும்.

Tags: itachi uchihajapan animemangiko sharingannarutonaruto uzumakiஇட்டாச்சி உச்சிஹாமாங்கிக்கோ ஷேரிங்கான்
Previous Post

ரீ ரிலீஸ்லையும் போட்டியா!.. தல தளபதி பிரச்சனை என்னைக்கும் ஓயாது போல!..

Next Post

குடித்துவிட்டு வாழ்க்கையை சீரழித்த அண்ணனும், தாயும்… ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை!.

Related Posts

kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

February 13, 2026
Dr Stone Anime: அமெரிக்காவை வைத்து செஞ்ச டாக்டர் ஸ்டோன் தொடர்.. இவ்வளவு வன்மமா?

Dr Stone Anime: அமெரிக்காவை வைத்து செஞ்ச டாக்டர் ஸ்டோன் தொடர்.. இவ்வளவு வன்மமா?

October 24, 2025

Demon Slayer: டீமன் ஸ்லேயரில் அமெரிக்காவை வச்சு செஞ்ச ஜப்பான்.. அனிமே ரசிகர்கள் இதை கவனிச்சீங்களா?

October 24, 2025

ஒரே செகண்டில் அழியும் உலகம்.. காப்பாற்றும் விஞ்ஞானி.. Dr. Stone Anime Tamil Dubbed Series Story

October 15, 2025

தமிழில் வெளியான Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle… அனிமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

August 19, 2025

தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக ரசிகர்களை கொண்ட அனிமே தொடர்கள்

July 1, 2025
Next Post
sangeetha

குடித்துவிட்டு வாழ்க்கையை சீரழித்த அண்ணனும், தாயும்… ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved