தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை தனக்கென தக்க வைத்திருக்கும் முக்கிய நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். சமீப காலமாக ரஜினிகாந்த் நடித்து வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பைதான் தந்துள்ளன.
அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு அதிக வெற்றியை கொடுத்த படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான கதையை நெல்சன் எழுதி வந்தார். அந்த சமயத்தில்தான் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வந்தார். எனவே ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதமானது.
இந்த நிலையில் தற்சமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் நெல்சன்,அனிரூத் மற்றும் ரஜினிகாந்த் இடம் பெறும் வீடியோவாக அது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் இருந்தது போலவே இதிலும் பேன் இந்தியா ஸ்டார்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் துவங்குகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.