பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை சண்டையிட்டுக்கொள்ள செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் பிரதானமான விஷயமே.

அந்த வகையில் இந்த வாரம் இரு குழுவாக பிரிந்து இனிப்பகம் ஒன்று திறக்க வைத்தனர். அதில் யார் அதிகமாக விற்பனை செய்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி என கூறப்படுகிறது.
எனவே இரண்டு குழுவும் இதற்காக சண்டையிட்டு கொள்கின்றன. இந்த நிலையில் திடீரென ஒரு டாஸ்க்கை அமல்ப்படுத்தினார் பிக்பாஸ். அதாவது ஒவ்வொருவரும் பிக் பாஸ் வீட்டில் யார் நல்லவர் போல முகமூடி போட்டிருப்பவர் என கூற வேண்டும்?
ஜனனி உடனே ஏ.டி.கே என கூறினார். இதனால் மனம் நொந்து போனார் ஏ.டி.கே. “உன்னை என் தங்கை போல நினைத்தேன் ஜனனி. உன் மேல எவ்வளவு அன்பு வைத்திருந்தேன்” என கண் கலங்கினார் ஏ.டி.கே.








