News
ஒரு ரூபாய் காசு கூட இல்லை. நடு ரோட்டில் நிற்கும் ஜெயம் ரவி..! ஆர்த்தி செய்த சம்பவம்..!
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சில நாட்களுக்கு முன்பு பதிவு ஒன்றை வெளியிட்டார். அது முதலே சர்ச்சைகள் அதிகமாக வெடித்து வந்தது.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஆர்த்தி தன்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் கூறாமலேயே ஜெயம் ரவி விவாகரத்துக்கு அறிவித்திருப்பதாக கூறியிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
ஜெயம் ரவிக்கு நடந்த கொடுமை:
இந்த நிலையில் இதற்கு விரிவான விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி அதில் அவர் கூறும் பொழுது ஆர்த்தியும் அவரது தாயாரும் சேர்ந்தது தொடர்ந்து ஜெயம் ரவிக்கு கொடுத்து வந்த தொல்லைகளின் காரணமாக தான் அவர் விவாகரத்துக்கு முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்.
மேலும் ஜெயம் ரவி கூறும்பொழுது நான் விவாகரத்து அறிவித்த உடனேயே எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் துவங்கி எனது பாஸ்போர்ட் வரை அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டனர் ஆர்த்தியின் குடும்பத்தினர்.
மேலும் எனது வங்கி கணக்கையும் முடக்கி விட்டனர். தற்சமயம் எதுவும் இல்லாமல் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.
மேலும் இவர் போலீசில் வழக்கு போட்டு தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் கார் சாவியை மட்டுமாவது அவர்களிடம் இருந்து மீட்டு தரும்படி கேட்டு இருக்கிறார். ஏனெனில் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் துவங்கி அவருடைய வங்கி கணக்கு வரை எல்லாத்திற்கும் மனைவியின் மொபைல் நம்பர் தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் தற்சமயம் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் ஜெயம் ரவி.
