ஜெயம் ரவி விவாகரத்து குறித்த விஷயங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிக சூடு பிடித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவியை ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தது.
அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி தனக்கு இந்த விவாகரத்தில் சம்மதம் இல்லை என்றும் ஜெயம் ரவி தன்னிடம் கேட்காமலேயே இதை செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார்.
உண்மையை கூறிய ஜெயம் ரவி:
இந்த நிலையில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது இதற்கு நடுவே பிரபல பாடகியான கணிஷாவுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாக ஒரு புது வதந்தி கிளம்பியது.

அடிக்கடி கோவாவிற்கு செல்லும் ஜெயம் ரவி அங்கு கனிஷாவுடன் காதலில் இருந்து வந்ததாகவும் இதை தெரிந்து அவரது மனைவி மிரட்டியதால் தான் ஜெயம் ரவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் ஜெயம் ரவி. அதில் அவர் கூறும் பொழுது தனிஷா தனது உழைப்பால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டவர். அவரை என்னுடன் சேர்த்து வைத்து இப்படி மோசமாக பேசுவது தவறு.
தனிப்பட்ட நபர்களின் விஷயங்களை தனிப்பட்ட அளவிலேயே விட்டுவிடுவது நல்லது நானும் கனிஷாவும் சேர்ந்து எதிர்காலத்தில் தொழில் செய்யலாம் என்றெல்லாம் இருக்கிறோம் தயவு செய்து இப்படி தவறான விஷயங்களை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.








