News
நானும் உன்ன திரும்ப அடிப்பேன்.. டீசண்டா பேசு மணி.. வார்னிங் கொடுத்த குரேஷி.!
தற்சமயம் குக் வித் கோமாளி தொடர்பான விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பல வருடங்களாகவே குக் வித் கோமாளியில் இருந்து வருபவர் மணிமேகலை.
சமீபத்தில் மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருந்தார் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்து வந்தார் மணிமேகலை.
இந்த சீசனில்தான் தொகுப்பாளராக பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அதில் குக்காக வந்த வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குக் வித் கோமாளிலிருந்து விலகி இருந்தார் மணிமேகலை.
மணிமேகலை குறித்து குரேஷி
இந்த நிலையில் இது குறித்த காரசாரமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. இதற்கு நடுவே தற்சமயம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் மணிமேகலை.
இந்த வீடியோவில் அவருடன் நண்பர்களாக பழகி அவருக்கு ஆதரவு கொடுக்காத நபர்களை பற்றி பேசி இருக்கிறார் மணிமேகலை. அப்படியாக அவர் பேசும்பொழுது அதில் குரேஷியையும் ஈடுபடுத்தி பேசி இருக்கிறார்.
நண்பர்கள் என்று நினைத்தவர்கள் வாட்ஸ் அப்பில் நல்லவிதமாக பேசிவிட்டு பிறகு தனக்கு ஆதரவாக பேசவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த குரேஷி கூறும்போது ஒரு லிமிட்டோட இருந்துக்கிறது நல்லது என்று கூறும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இது மணிமேகலைக்கு பதிலாக இவர் போட்ட வீடியோ தான் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
