Bigg Boss Tamil
அந்த புள்ள சாச்சனா நினைப்பா இருக்கு.. கண்ணீர் விட்ட ஜெஃப்ரி.. இது என்னப்பா புது கதையா இருக்கு..!
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத வகையில் புதிதாக இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளிலேயே ஒரு ஆள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தற்சமயம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது விஷயமாக இருக்கிறது .
தொடர்ந்து தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8இல் ஏகப்பட்ட விஷயங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. வீட்டுக்கு நடுவே கோடுகளில் துவங்கி பல விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. எனவே போகப்போக இந்த நிகழ்ச்சியிலுமே இன்னும் புதுமையாக நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாச்சனா நினைப்பா இருக்கு
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் தண்டனை கொடுப்பதற்காக சிறை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது கூட இந்த முறை இல்லை. எனவே தண்டனைகள் கூட வேறு விதமாகதான் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வந்த முதல் நாளே சாச்சனா போனதற்கு முக்கிய காரணம் அங்கிருந்த போட்டியாளர்கள்தான் அதிகப்படியான நபர்கள் சாச்சனாவை நாமினேட் செய்த காரணத்தினால் அவரை நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று பிக் பாஸில் கலந்திருக்கும் கானா பாடல்கள் பாடும் ஜெஃப்ரி எலிமினேஷன் குறித்து மிகவும் வருத்தப்பட்டு வருகிறார் மேலும் சாச்சனாவுக்காக ஒரு பாடலை அவர் பாடி வந்தார். இதனை பார்த்த ஜாக்லின் நீயும் சேர்ந்துதானே அவளை வெளியே அனுப்பினாய். இப்பொழுது சோக பாடல் பாடிக் கொண்டிருக்கிறாய் என்று அவரை கலாய்த்து இருக்கிறார்.
