Tech News
போன் காலுக்கு தனி பேக்.. ஆனா இதுக்கு தனி பேமண்ட்.. கஸ்டமர்களுக்கு புது அதிர்ச்சி கொடுத்த சிம் நிறுவனங்கள்..!
சிம் நிறுவனங்கள் என்னதான் புது புது டாரிஃப் ப்ளான்களை அறிவித்தாலும் அவை ட்ராய் எனப்படும் (Telecom Regulatory Authority of India) இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த வருடம் வரை கால்களுக்கு மட்டும் என்று தனி ரீச்சார்ச் ப்ளான்களே இருந்து வந்தன. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் அல்லாத ஃப்யிச்சர் போன் எனப்படும் சாதாரண மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களது தேவைக்கு இணையம் இல்லாத ரீச்சார்ச் ப்ளான்களே போதுமானதாக இருக்கிறது. ஆனால் சிம் நிறுவனங்கள் எதுவுமே அவர்களுக்கு ஏற்ற ப்ளான்களை வெளியிடவில்லை. இதனால் கால்களை மட்டும் பேசுவதற்கும் அவர்கள் இணையத்துடன் கூடிய ப்ளான்களை போட வேண்டி இருந்தது.
இந்த நிலையில் ட்ராய் அதிரடியாக ஒரு விதிமுறையை அறிவித்தது. அதன்படி சிம் நிறுவனங்கள் இணையம் அல்லாத அன்லிமிடெட் கால்களை கொண்ட ரீச்சார்ச் திட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும். அந்த வகையில் அனைத்து சிம் நிறுவனங்களும் தற்சமயம் அப்படியான திட்டங்களை அமல்ப்படுத்தி உள்ளன.
ஆனால் அதற்கு நடுவே பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செயல் ஒன்றை சிம் நிறுவனங்கள் செய்துள்ளன. இதற்கு முன்பு டேட்டாவுக்கு என்று இன்ஸ்டண்ட் ப்ளான்களை சிம் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
அதன்படி 19 ரூபாய்க்கு 2 ஜிபி இணையம் என்கிற சின்ன பேக்குகள் இருந்தன. அவை இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவற்றிற்கான காலகெடுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு இந்த பேக்குகளை போட்டால் டேட்டா நாம் ஏற்கனவே போட்டிருக்கும் பேக்குகள் தீரும் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என இருந்தது.
அதை இப்போது மாற்றி ஒரு நாள் கால அவகாசத்திற்குள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாற்றியுள்ளன சிம் நிறுவனங்கள். ஆண்ட்ராயிடு மொபைல் பயன்படுத்தினாலும் பெரிதாக டேட்டாவை பயன்படுத்தாத பயனர்கள் இருப்பார்கள். அதே போல வீட்டில் ஃபைபர் இணையம் வைத்திருப்பவர்கள் வெளியில் செல்லும்போது மட்டுமே இணையத்தை பயன்படுத்துவார்கள்.
அவர்கள் எல்லாம் கால் பேசுவதற்கு மட்டும் கார்டு போட்டுக்கொண்டு இணைய பயன்பாட்டுக்கு இந்த குறைந்த விலை டேட்டா பேக்குகளை போட்டு கொள்ளலாம் என நினைப்பார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்தான் சிம் நிறுவனங்கள் இந்த வேலையை பார்த்துள்ளன.
எனவே ஆண்ட்ராயிடு பயனாளர்களுக்கு வேறு வழியே இல்லை. தினசரி இணையத்துடன் கூடிய அன்லிமிடெட் கால்ஸ் பேக்குகளையே அவர்கள் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஃபியூச்சர் மொபைல்களை கொண்ட பயனாளர்கள் மட்டுமே அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட பேக்குகளை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக இப்படி ஒரு ஏற்பாட்டை பார்த்துள்ளன சிம் நிறுவனங்கள் என இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் பயனாளர்கள்.
