Entertainment News
பாடகியா இவங்க..! கதாநாயகியை மிஞ்சும் அனிரூத்தின் ரீல் காதலி.. இவ்வளவு மாடர்னா?..
பின்னணி பாடகிகளை பொறுத்தவரை அவர்கள் சிறப்பான பாடல்களை கொடுத்தாலும் கூட அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமடைவது இல்லை. ஆனால் இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக பின்னணி பாடகிகளுக்கு கூட வரவேற்பு இருந்து வருகிறது.
அப்படியாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் பாடகி ஜொனிட்டா காந்தி. ஹிந்தியில் பாடகியாக இருந்த இவர் தமிழிலும் இப்போது பிரபல பாடகியாக இருந்து வருகிறார்.
பெரும்பாலும் அனிரூத் இசையமைப்பில் இவர் பாடல்கள் பாடுவதை பார்க்க முடியும். தொடர்ந்து இவர் அனிரூத்தின் பாடல்களில் பாடுவதை பார்த்து இவரும் அனிரூத்தும் காதலிப்பதாக கூட வதந்திகள் பரவி வந்தன.
இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் நடிக்க போவதாக எல்லாம் பேச்சு இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஜொனிட்டா காந்தி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.