Box Office
இத்தனை நாளில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படம் கொடுத்த வசூல்..!
குழந்தைகள் மத்தியில் எப்பொழுதுமே டைனோசர் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனாலையே ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் டைனோசரை வைத்து வந்து கொண்டு இருக்கின்றன.
ஜுராசிக் பார்க் திரைப்படத்தை இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பார்க் இயக்கினார். அதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் வெவ்வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் வந்தாலும் டைனோசர் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு வடிவத்தை கொடுத்தவர் ஸ்டீபன் ஸ்பெல்பர்க்தான்.
அதற்கு பிறகு அந்த வடிவத்தை தான் இப்போது வரை டைனோசர்களுக்கு திரைப்படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜுராசிக் வேல்டு ரீபர்த் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு தேவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பும் இந்த படத்திற்கு கிடைத்தது. இந்த நிலையில் 6000 கோடி வசூல் செய்து இருக்கிறது ஜுராசிக் வேல்டு ரீபர்த் திரைப்படம்
