கைவிட்ட சமந்தா; விலகும் நயன்தாரா..? – கவலையில் விக்னேஷ் சிவன்!

தமிழில் போடா போடி, நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

Social Media Bar

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு நயன்தாராவே தனது “ரௌடி பிக்சர்ஸ்” மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய்யால் வந்த சங்கடம்.. பொறுத்து கொண்ட சிவகார்த்திகேயன்!

ஆனால் படவேலைகள் தொடங்கியது முதலாகவே பல்வேறு மனக்கசப்புகள் படக்குழுவிற்குள்ளேயே நடந்ததாக பேசிக் கொள்ளப்படுகிறது. முதலாவதாக இந்த படத்திற்காக விஜய் சேதுபதி அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் அதை விக்னேஷ் சிவன் சரியாக பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விஜய் சேதுபதி இயக்குனர் மீதும், நயன்தாரா மீதுமே மனக்கசப்பில் உள்ளாராம். இந்நிலையில் முன்னதாக விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் கேக் வெட்டியபோது சமந்தாவும் கலந்து கொண்டார். அப்போது சமந்தாவுடன் விக்னேஷ் நெருங்கி பழகியது நயன்தாராவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளுக்கு விஜய் சேதுபதி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். சரி சமந்தா, நயன்தாராவை வைத்து ப்ரமோட் செய்யலாம் என்றால் சமந்தாவும் வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் கைவிட, சொந்த படத்திற்கு ப்ரொமோஷனுக்கு வர நயன்தாராவே யோசனையில் உள்ளாராம். இதனால் படத்தை எப்படி ப்ரொமோட் செய்வது என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம் விக்னேஷ்.