Connect with us

விஜய்யால் வந்த சங்கடம்.. பொறுத்து கொண்ட சிவகார்த்திகேயன்!

News

விஜய்யால் வந்த சங்கடம்.. பொறுத்து கொண்ட சிவகார்த்திகேயன்!

Social Media Bar

தமிழின் உச்ச நட்சத்திரமாக குறுகிய காலத்தில் கால்பதித்தவர் சிவகார்த்திகேயன்,  தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து இவர் நிகழ்த்தியது மிகப்பெரும் சாதனை.

Don
Don

கடைசியாக இவர் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கியவர் நெல்சன். இதற்குபிறகு அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கிறார்.

இதில் டாக்டர் படத்தில் இவருடன் இணைந்து நடித்த ப்ரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியிடுவதாக இருந்தது.

Don
Don

ஆனால் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் வெளியானதால், டான் மே மாதம் 13ம் தேதிக்கு தள்ளி போயுள்ளது. பெரிய நட்சத்திரங்கள் திரைப்படம் வெளியாகும்பொழுது பட வெளியீட்டு தேதியிலிருந்து ஒரு மாதம் முன்பே விளம்பரங்கள் களை கட்டும்.

இதையும் படிங்க: ஒரு வாரம் கூட ஆகல.. ஆல்யா பட் எடுத்த திடீர் முடிவு!

ஆனால் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் எந்தவிதமான விளம்பரங்களும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் விஜயின் பீஸ்ட் திரைப்படம் என்று திரையுலகத்தினர் கிசு கிசுக்கின்றனர்.

Beast
Beast

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகிய பீஸ்ட் உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கான விளம்பரங்கள் இந்தியா முழுவதுமே சன் பிக்சர்ஸ் சிறப்பாக செய்து வருகிறது. இதையெல்லாம் கவனித்த சிவகார்த்திகேயன் இப்போது டானுக்கான விளம்பரங்களை ஆரம்பிக்க வேண்டாம், பீஸ்ட் விளம்பரங்கள் முன் நம்முடைய விளம்பரங்களின் மதிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

எனவே பீஸ்ட் அலை கொஞ்சம் ஓயட்டும், அதற்குபிறகு டான் திரைப்படத்திற்கான விளம்பரங்களை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறாராம். பீஸ்ட் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் டான் பப்ளிசிட்டிகள் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

To Top