சிவாஜியின் மரணத்துக்கு 15 நாள் முன்பு நடந்த சம்பவம்.. முன்னவே அவருக்கு தெரிஞ்சுருக்கு!.

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை பொறுத்தவரை நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நடிகராக அவர் இருந்திருக்கிறார்.

சம்பளத்திற்கு நடிக்கிறோம் என்பதை தாண்டி நடிப்புதான் அவருக்கு எல்லாமே என்கிற நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே இளமை காலங்களில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்து வந்தார்.

சிவாஜி கணேசன்:

கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவரது வீட்டிற்கு கூட செல்லாமல் படப்பிடிப்பிலேயே அவர் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஈடுபாடு கொண்டவர், கடைசி காலங்களில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனபோது ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குனர்களிடம் கூறி பிறகு துணை கதாபாத்திரமாக நடித்த தொடங்கினார் சிவாஜி கணேசன்.

அந்த அளவிற்கு நடிப்பை விட்டு விலக முடியாத ஒரு நபராக அவர் இருந்திருக்கிறார் அவருடன் தனது அனுபவம் குறித்து கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை சிவாஜி கணேசன் என்னை அவரது வீட்டிற்கு உணவு அருந்துவதற்காக அழைத்தார்.

Social Media Bar

நானும் அப்பொழுது சென்றேன் எனக்காக தயாராக அங்கு அவர் அமர்ந்திருந்தார். நான் போய் அமர்ந்தவுடன் என்னுடன் பேச தொடங்கினார் உண்மையில் அவருடைய கஷ்டங்களை பேசுவதற்கு அப்போது ஆளில்லாததினால் என்னை அழைத்திருந்தார்.

மனம் வருந்திய சிவாஜி:

அங்கு சென்றபோது அவரது பேத்தி படும் கஷ்டங்களை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது பேத்தியின் கணவர் சிறையில் இருந்தார். அதனால் அவரது பேத்தி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

அது குறித்து பேசிய சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர்தான் ராஜா மாதிரி இறந்து போய்விட்டார். நல்லபடியாக வாழ்ந்து நல்லபடியாகவே சென்று விட்டார் நான் அந்த பஸ்ஸை மிஸ் செய்து விட்டேன் என்று மிக மன வருத்தத்துடன் பேசி இருக்கிறார் சிவாஜி கணேசன்.

அதற்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு சிவாஜி கணேசன் இறந்துவிட்டதாக கூறுகிறார் கலைப்புலி எஸ் தாணு. எனவே தனது இறுதி நாள் வரப்போவதை அறிந்து பலரையும் பிறகு சந்தித்து சிவாஜி கணேசன் பேசியதாக கூறப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.