கல்யாணி பிரியதர்ஷனின் அசத்தும் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் இவருக்கும் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தன.

இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலுமே இவர் படம் நடித்து வருகிறார். நேர்த்தியான உடை அழகு, சிரிப்பழகு போன்றவற்றை கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கல்யாணி. தமிழில் மாநாடு திரைப்படம் இவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது.

மலையாளத்தில் இவர் நடித்த தள்ளுமாலா என்கிற திரைப்படம் மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. 

அந்த வகையில் தற்சமயம் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு விளம்பரம் அளிக்கும் வகையில் அந்த கடையின் நகைகளை போட்டு இவர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh