தமிழக மக்களில் நீங்கள் பல காந்திகளை காணலாம்! –  ராகுல் காந்தியுடன் விவாதித்த கமல்!

இந்திய சினிமாவில் மாபெரும் இலக்கியவாதி, நடிகர், மற்றும் பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

Social Media Bar

பல அரசியல்வாதிகளுடன் கமல் பேசியுள்ளார். அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பது கமலின் பெரும் கனவாக இருக்கிறது. இதனால் அவர் தொடர்ந்து சமூகங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை சந்திப்பதற்கான வாய்ப்பு கமலுக்கு கிடைத்தது. அங்கு சென்ற கமல் பல விஷயங்களை குறித்து ராகுல் காந்தியிடம் பேசினார்.

அப்போது தனது ஹே ராம் திரைப்படத்தை குறித்தும் ராகுல் காந்தியிடம் பேசினார். அதில் காந்தியை கொல்ல முயற்சிக்கும் ஒரு கதாபாத்திரமாக கமல் நடித்திருப்பார். அதுப்பற்றி கூறும்போது ராகுல் காந்தி வியப்படைந்தார்.

பிறகு மத்திய அரசின் ஆட்சி, தமிழர்களின் நிலை என பலவற்றை குறித்தும் அவர்கள் விவாதம் செய்தனர். அப்போது தமிழர்களை மிகவும் பெருமையாக பேசினார் கமல்.

அந்த விடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.