சுடிதாரில் கூட போட்டோ ஷூட் பண்ணலாம்! – க்யூட் போட்டோக்கள் வெளியிட்ட சிம்பு பட நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்து தற்சமயம் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சித்தி இத்னானி.

2017 முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார் சித்தி இதானி. 2018 இல் ஜம்பலகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு ப்ரேம கதா சித்திரம் 2 மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தார். ஆனால் அவை எதுவும் இவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை.

இந்த நிலையில் போன வருடம் வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

தற்சமயம் நூறு கோடி வானவில் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh