Connect with us

கைமாறிக்கொண்டே இருக்கும் கமலின் கால் ஷூட்.. – அடுத்த படத்துக்கு செம ப்ளான் இருக்கு..!

Latest News

கைமாறிக்கொண்டே இருக்கும் கமலின் கால் ஷூட்.. – அடுத்த படத்துக்கு செம ப்ளான் இருக்கு..!

Social Media Bar

கமலின் அடுத்த படம் யார் கூட? பெருவாரியான தமிழ் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட்டை பிடித்துள்ளர் கமல்ஹாசன்.

அதே சமயம் தமிழ் சினிமாவின் பெரும் இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹெச்.வினோத், இயக்குனர் ரஞ்சித் மற்றும் மணிரத்னம் ஆகியோரிடம் படம் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

கமலின் பிறந்தநாளின்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் படம் நடிக்கிறார் என தகவல் வெளியிட்டது லைக்கா நிறுவனம். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படம் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் கமல் என்கிற கேள்வி இருந்தது.

இந்நிலையில் தற்சமயம் வந்த தகவல்களின்படி கமல் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சதுரங்க வேட்டை மாதிரியான ஒரு நெகட்டிவ் கேரக்டர் வைத்த திரைப்படம் வேண்டும் என கமல் கேட்டிருந்தார். இந்நிலையில் கமலே தயாரிக்கும் இந்த படம் சின்ன பட்ஜெட்டில் தயாரித்து பெரிய லாபம் ஈட்டும் வகையில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top