Actor Kamalhaasan: தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரது பல நாள் கனவாக இருந்தது.
ஹே ராம் படத்தில் துவங்கி தொடர்ந்து பல வகையான புது திரைப்படங்களை கமல்ஹாசன் முயற்சி செய்திருப்பதை பார்க்க முடியும். மனோபாலா முன்பொரு பேட்டியில் கூறும்போது கூட நான் இயக்குனர் ஆன உடனேயே உலக சினிமாக்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் எனதான் கமல் என்னிடம் கூறினார் என்றார் மனோபாலா.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை மாற்றி அமைக்க மிகவும் முயற்சித்தார் கமல்ஹாசன். இதற்காக ராஜ்கமல் பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இதில் இவர் உருவாக்கிய பெரும் நல்ல படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாததால் பலமுறை நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

ஆனால் அவர் தயாரிப்பில் வந்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. ஒரு ஆக்ஷன் படமாக விக்ரம் சிறப்பான படம் என்றாலும் கூட கமல்ஹாசனின் மாற்று சினிமாக்களோடு ஒப்பிடும்போது அது ஒரு மாமூலான தமிழ் படம்தான்.
ஆனால் கமல்ஹாசன் வெகுவாக உழைத்த படங்களுக்கு கிடைக்காத அங்கீகாரமும் வெற்றியும் அந்த படத்திற்கு கிடைத்தது. இதை நேரடியாக குறிப்பிடும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது படம் எடுக்குறவனுக்கு தெரியும் அது நல்ல படமா இல்லையான்னு, நான் தயாரிச்ச சில படங்களுக்கே என்னடா படம் இப்படி இருக்கேன்ன்னு தலையில் கையை வச்சிட்டு உக்காந்திருப்பேன்.
ஆனால் அந்த படம் ஹிட் அடிச்சிருக்கு என கூறியுள்ளார். இதனை வைத்து ஆண்டவர் விக்ரம் படத்தைதான் கூறுகிறார். ஏனெனில் அவரது தயாரிப்பில் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அந்த படம்தான் என கூறுகின்றனர் ரசிகர்கள்.






