News
ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேல் கடுப்பான ஆண்டவர்! – ரெட் கார்டு வாங்க போறது யார்?
பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டாவது வாரம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஸ்மால் ஹவுஸ் வீட்டார் நடத்திய வேலை நிறுத்த போராட்டம். திடீரென எக்ஸ்ட்ரா ஒரு ஆள் வேண்டும் என அவர்கள் நடத்திய போராட்டத்தால் சமையல் வேலை நடக்காமல் பலரும் பட்டினியில் கிடந்தார்கள்.
பின்னர் வீட்டு தலைவரான விக்ரம் சரவணன் பேசி ஒருவழியாக போராட்டத்தை முடித்து வைத்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டினருக்கு குடிக்க தண்ணீர் கூட தராததும், உடல்நிலை சரியில்லாதவர்களை உதாசீனப்படுத்தி பேசியதும் ஸ்மால் ஹவுஸ் வீட்டார் மேல் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதைதான் தற்போது கமல்ஹாசனும் வெளிப்படுத்தியுள்ளார்.
”வேலைப்பளுவை சுட்டிக்காட்டி நீங்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது. ஆனால் அதை செயல்படுத்திய விதம் அநியாயமானது. முன்னறிவிப்பில்லாமல் வேலைநிறுத்தம் செய்தது குற்றம். குடிக்க தண்ணீர் கூட தரமாட்டேன் என்பது போராட்டம் அல்ல. அது போர் ஒத்திகை. இது போராட்டத்திற்கு அழகல்ல” என்று கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த வாரம் எலிமினேஷன் இல்லாவிட்டாலும் அத்துமீறி நடந்த காரணத்திற்காக கமல்ஹாசன் யாருக்காவது Strike கார்டு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
