News
சிவக்குமார் குடும்பம்தான் அமீர் அண்ணன் காசை ஆட்டைய போட்டாங்க!.. அடுத்து வாய் திறந்த கஞ்சா கருப்பு!.
Director Ameer and Sivakumar : இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவிற்கு இடையேயான பிரச்சனையானது திரைத்துறையில் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்து சென்றுக்கொண்டுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் எடுக்கும்போது படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முழுக்க கொடுக்கவில்லை என்பது அமீரின் வாதமாக இருக்கிறது.
நானே என் கை காசை போட்டு படத்தை முடித்தேன் என அமீர் கூறுகிறார். ஆனால் ஞானவேல்ராஜா இதுக்குறித்து கூறும்போது அமீர் படம் குறித்து சரியாக கணக்கு காட்டவில்லை மேலும் அவர் ஒழுங்காக படம் எடுக்கவில்லை என கூறி அவரை அவதூறாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா.
இந்த நிலையில் இதை வன்மையாக கண்டித்து சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்றோர் தங்கள் கருத்துக்களை அளித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பும் தனது பங்கிற்கு தற்சமயம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது படத்திற்கு அதிக செலவு ஆனதற்கு முக்கிய காரணமே கார்த்திதான்.

நான் சிங்கிள் டேக்கில் நடிக்கும் காட்சியை கார்த்தி நடிக்க 15 டேக் தேவைப்பட்டது. அந்த தவறுக்கு கார்த்தி தானே காரணம். நான் அமீர் அண்ணனுக்கு விசுவாசமாக இருப்பதால் சூர்யாவும் கார்த்தியும் எனக்கு வாய்ப்பளிப்பதில்லை.
அமீர் தன் கை காசை போட்டு சிரமப்பட்டு பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்து பெரும் வெற்றியை கொடுத்தார். ஆனால் அதற்காக படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா கூட இந்த தயாரிப்பாளர் நடத்தவில்லை. சிவக்குமாரும் அவரது குடும்பத்தாரும்தான் அமீர் அண்ணன் காசை ஆட்டைய போட்டுட்டாங்க என வெளிப்படையாக கூறியுள்ளார் கஞ்சா கருப்பு.
சூர்யாவோ அல்லது கார்த்தியோ இன்னும் இதுக்குறித்து கள்ள மௌனத்தில் இருப்பது ஏன் என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.
